vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

போரூரில்: கபரஸ்தானில் அடக்கப்பட்ட உடலைஇ தோண்டி வேறு இடத்தில் அடக்கம்

போரூரில் அமைந்துள்ளது ஷேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்டஇ வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று செட்டியார் சமுகத்தை சார்ந்த ஒருவர் சுப்ரிம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 15.2.2010 அன்று இறந்த முஸ்லிம் ஒருவரின் உடலை அடக்கம் செய்தனர்.

இதை எதிர்த்து செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கற்களால் தாக்கினார்கள். இந்த தகவல் தமுமுகவினருக்கு கிடைக்கஇ மாவட்ட நிர்வாகிகளும்இ சகோதர அமைப்பினரும் சம்பவ இடத்தில் கூடினர். இதற்கிடையில் பள்ளிவாசலை சுற்றி 100லிக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு போட்டப்பட்ட னர். இந்த சம்பவம் இரு சமுதாயத்திற்கும் இடையை மதக்கலவரம் உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள்இ அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதன் பின் அனைத்து முஸ்லிம் அமைப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் 15.2.2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும்இ அடக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் கபரஸ்தானில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்த உறுதி மீறல் செயல் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களிடம் மிகுந்த அதிருப்தியும்இ வேதனையையும் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சமூக அமைப்புகளிடம் இருந்து தொடர் போராட்டங்களை உருவாக்கியுள்ளது.