vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

ராஸல்கைமாவில் அல் மஃரூஃப் டைலரிங் & டிரேடிங் திறப்புவிழா

ஐக்கிய அரபு அமீரகம் ராஸல் கைமா, மேரீஸ் பகுதியில் 'அல் மாரூஃப் டைலரிங் & டெக்ஸ்டைல்ஸ் L.L.C.' திறப்புவிழா 24--07-2009 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இத்திறப்புவிழாவிற்கு வந்திருந்தவர்களை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வி.களத்தூர் S.சாதிக்பாஷா வரவேற்றார். இணை இயக்குநர் K.முஹம்மது பாரூக் திறப்பு விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்நிறுவனத்தின் ஏனைய பங்குதாரர்கள் மற்றும் துபை. சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் பலர் வருகை புரிந்திருந்தனர்.

இந்நிறுவனத்தின் வியாபாரத்திட்டத்தைப் பற்றி அதன் மேலாண்மை இயக்குநர் சாதிக்பாஷா கூறும் போது, ' பெரிய நிறுவனங்களுக்கான யூனிபார்ம் , பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் உள்ளிட்டவைகள் மொத்தமாக, ஆர்டரின் பேரில் தைத்துத் தரப்படும். துணிவகைகள் மொத்தவியாபார விலையில் விற்கப்படும்' என்று தெரிவித்தார். நிறுவனங்களுக்கான யூனிபார்ம் தைக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 055 - 310 89 00.