vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வ.களத்தூர் கவிதை

'நவாப் தந்த வ.களத்தூர்'!

ஆற்காடு நவாப் தந்தது நமக்கிந்த ஊரு!
அதுவே வந்தோரை வாழ வைக்கும் வ.களத்தூரு!
கொல்லி மலையிலிருந்து உருண்டோடிவரும் கல்லாறு!
அது வ.களத்தூரில் வந்தோடும் அழகினைப் பாரு!

கண்ணியமாய் நிமிர்ந்துநிற்கும் இரு பள்ளிவாசல்கள் உள்ளஊரு!
அதனுள் பயபக்தியுடன் நடைபெறும் ஐவேளைத்தொழுகையைப்பாரு!
அதனை ‘அதபோடு’ தொழுதுக் கொள்பவர்கள் நிறைந்த ஊரு!
எண்ணற்றப் பிரச்சினைகளை எளிதில் தீர்த்துவைக்கும் நாட்டாண்மைகளின் தியாகத்தைப் பாரு!

வரதட்சணையை முற்றிலும் ஒழிக்க முதன் முதலாய் உறுதிமொழி வாங்கிய ஊரு!பொது நலத்தை மறந்தவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு ஏது!
நிச்சயம் நிலைத்து நிற்கும் எதிர்காலத்தில் நமது ஜமாத்தார்களின் தியாகத்தின் வீர வரலாறு!
எம்மதத்தவரும் சகோதரத்துடனும் சந்தோஷத்துடனும் வாழுகின்ற ஊரு!

அதுவே மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதையும் பாரு!

அதுவேதான் எங்கள் வி.களத்தூரும்!