vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வளர்க… நீ ஆண்டுகள் அல்ல… யுகங்கள் பல.
வி. களத்தூர் இணைய தளம்
வலை உலகில் உதித்து
ஆண்டு ஒன்று ஆனது.

மாவட்டம் மட்டும் அறிந்த
சிற்றூர் தனை – இந்த
மா நிலம் முழுதும் அறிய வைத்தாய் !

உன்னை முதல் முதலாய்
பார்த்த போது – இவன்
என்ன சாதிக்கப் போகிறான்
என்று எண்ணியதும் உண்டு.

இன்றோ இவன் இன்னும்
சாதிக்கப் போகிறான் – என்று
வியந்து போய் நிற்கிறேன்
உன் இணைய தளம் கண்டு…

வலைதள ஆக்கமும்…
வலைதள நோக்கமும்…
வளர வேண்டும்… மேன்மேலும்
ஆண்டுகள் அல்ல… யுகங்கள் பல..

உளம் நிறைந்த வாழ்த்துக்களுடன்

வி.களத்தூர் நிலாப்ரியன்.