விகளத்தூர் டாட்காம் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பதைக் கண்டு வாழ்த்த நினைத்து…
( என் முதல் ஆக்கம், தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் இல்லை தட்டிக் கொடுங்கள்)
ஓ… விகளத்தூர் டாட் காமே..
உன்னால் தான்
என் ஊர் பெயர்
ஊரறிந்தது.
உலகறிய நெடுங் காலமில்லை!
உன்னால்தான்
என் ஊரில்
புதிய கவிஞர்கள் - நிலா ப்ரியனும், உங்கள் தோழனும்
உதயமாகினர் - ஆம் கவிதை எழுதினர்.
ஆண்டு மலரில் மட்டும் – நான்
கண்ட என் ஊர் கவிஞர்
(வசந்த வாசல்) சலீமின்
கவிதைகளை வாசிக்க கொடுக்கிறாய்.
கடைவீதியை
காட்டினாய்
அதை படிக்கும் போது
(நேரடியாக) கடைவீதியில் நான்.
நீ ஒரு வருட
குழந்தை இல்லை
அனுபவமிக்க
முதியவன் நீ !
நல்ல மாற்றத்தால்
ஏற்றத்தை நீ அடைவாய் !
மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும்
முடிந்த உதவி செய்ய நாடும்
மில்லத் நகர் அபு இர்ஷாத்
வி. களத்தூர்.
|