'பொங்கல் ' - அன்றும் இன்றும்
----------------------------- - உங்கள் தோழன் -
தைப்பிறந்தால் வழிப்பிறக்கும் அன்று…
அதே தைப்பிறந்தும் வழி வகையில்லையே இன்று!
போகியன்று பழைய பொருட்களையும் மூடக்கொள்கைகளையும்
எரித்து மகிழ்ந்தனர் அன்று…
அதே போகியன்று மரக்கட்டைகளையும்
டயர் டியுப்களையும் எரித்து ஓசோனை மாசுபடுத்துகின்றனர் இன்று!
வயலில் இறங்கி உற்சாகத்துடன் உழுது
பயிர் செய்து பாடுபட்டதன் விளைவு
வயல்கள் வாஞ்சையோடு வாரி வழங்கியது அன்று…
அதே வயல்கள் இருந்தும் நாம் சுறுசுறுப்பின்றி சோம்பலாகி
விவசாயத்தை விட்டு ஒதுக்கியதன் விளைவு
வயல்களெல்லாம் மாசுபட்டு முட் புதராகவும் மனைப்பிரிவாகவும் வறண்டு கிடக்கிறது இன்று!
அங்காடியில் ஆனந்தத்தோடு ஆடையெடுத்து புதுதானியத்தில் பொங்கல்வைத்து
குதூகலித்தது அன்று..
அதோகதியென அரசின் இலவச ஆடையை அணிந்து கூட்டுறவு அங்காடியில்
அரிசி வாங்கி பொங்கல் வைத்து புழுங்குவது இன்று!
ஊரையெல்லாம் திரட்டி தேரடியில் நிறுத்தி
காளைகளைவிரட்டி கண்காணிப்போடு கறுநாள் கொண்டாடியது அன்று…
அதே கறுநாள் இன்று காளைக்கு மதுபுகட்டி மதிமங்கி மிரண்டோடச் செய்து
விபரீதம் பல ஏற்படுத்தி பலர் விதவையாகிறார்கள் இன்று!
அன்றுபோல் இன்றும் செயல்பட்டு பொறுப்போடு பொங்கலைக் கொண்டாடின்
என்றும் புன்னகைப் பொங்குமே பொங்கல்….
அனைவர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
---தோழன் மு.அப்துல் ரஹீம் (மிலிட்டரி)
|