நினைவின் சுமைகள்
திரவியம் தேடி…
உடல் மட்டும்
திரைக்கடல் தாண்டி…
உயிரை மட்டும்
உன்னிடத்தில் விட்டு
ஆண்டுகள் இரண்டு கழிய
ஆயுள் கால வேதனை…
பாலையில்
நான் இருந்து..
வெம்மை
என்னைச் சுடுவதில்லை.
தனிமையில்
நான் வாடுவதால்…
உன் நினைவுகள்
என்னைச் சுடுகிறது.
பிரிவின் சுமையோ
இரண்டு ஆண்டுகள் தான்…
நினைவின் சுமையோ
நிமிடங்கள் தோறும்…
-----வி.களத்தூர்நிலாப்பிரியன்
|