vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

கவிதைகள்

புத்தாண்டு !

நொடிகள் துடிதுடித்தன
நிமிடமாய் மாறின!
நிமிடம் நிதானத்துடன் நகர்ந்தன
மணியாய் மலர்ந்தன!

மணிகள் மறைந்தோடின
நாட்கள் புலர்ந்தன!
நாட்கள் சுழன்றன
மாதமாய் முடிந்தன!

மாதங்கள் மறைந்தன
ஆண்டும் சென்றடைந்தன
புத்தாண்டும் பிறந்தது.

இழந்த ஆண்டில் நாம்
இழந்தது என்ன?
பெற்றது என்ன?
சிந்தித்து சீர் தூக்கி
புதுத்திட்டம் வகுப்போம்
குதூகலிப்போம்

----உங்கள் தோழன் ---