vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூர் அருகே உள்ள பிம்பலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மனுநீதி நாள்

பிம்பலூரில் புதன்கிழமை (ஆக. 12, 2009) சிறப்பு மனு நீதிநாள் முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகேயுள்ள பிம்பலூர் கிராமத்தில் ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது.
 முகாமில், சம்பந்தப்பட்ட தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
 எனவே, இம்முகாமில், பிம்பலூர் பகுதி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.