ஒவ்வொரு நாளும் உன்னதமே என்ற நூலில் இருந்து..
01. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி வழிகாட்டியதாலேயே மேரி கியூரி றேடியம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார். றேடியம் என்றால் என்ன அது எப்படியிருக்கும், அதை எப்படி எடுப்பது என்பதெல்லாம் அவருக்கு முன்னரே தெரியாது. நீங்கள் தேடினால் தேடுவது இருக்கும் இடத்தை அந்தச் சக்தி காட்டித்தரும்.
02. எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த மக்கள் எண்ணிய எண்ணங்கள் அண்டத்தில் ஈதர் என்ற வெளியில் உறிஞ்சப்பட்டு அப்படியே பதியப்பட்டு இருக்கின்றன என்று தோமஸ் அல்வா எடிசன் நம்பினார். இந்த ஈதர் வெளியுடன் தொடர்பு கொண்டு சிறந்த பழைய எண்ணங்களை பெறலாம் என்றார். அவர் மின்சாரத்தை கண்டு பிடிக்க ஈதர் வெளி பெரும் துணையாக இருந்தது.
03. நாம் பாவித்த பின்னர் நதி கடலுக்குப் போய் நிறைவதைப்போல, நமது எண்ணங்களும் ஈதர் வெளிக்கு செல்கின்றன. அங்கு அவை விடயங்களாகப் பிரிக்கப்பட்டு மறுபடியும் அண்டவெளியில் சமுத்திரம் போல சேமிக்கப்பட்டுக் கிடக்கின்றன.
04. கல்வி எழு பிறப்பும் தொடரும் என்று வள்ளுவர் சொன்னது ஏழு பிறப்புக்களை அல்ல எழுகின்ற பிறப்பெல்லாம் அது தொடரும் என்பதுதான். இதற்குக் காரணம், இந்த ஈதர் வெளியில் இருந்து உணர்வுகளை நாம் பெறுகிறோம். அதற்கு பல கோடி வருட வரலாறு உள்ளது. பிறந்த பசு தாயிடம் பாலைக்குடிக்கும் தகவலை அங்கிருந்தே பெறுவது ஓர் உதாரணம்.
05. ஆபத்தான சூழல் வரும்போதெல்லாம் ஒரு புதிய தலைவன் தோன்றுவான். அமெரிக்கர்களின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகி சிதைவடைய இருந்த நேரம் ஆபிராகாம் இலிங்கன் தோன்றினார்.
06. 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை திரும்பத் திரும்ப பேசும் ஒலி நாடாவை போட்டுவிட்டு தூங்கினால் தூக்கத்திலேயே படிக்க வேண்டிய கல்வியைக் கற்றுவிடலாம்.
07. வலியும் உடல் நோயும் மனிதனுக்கு நன்மை தருவதற்கான சாதனங்களாக படைக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் அவற்றை சாபங்களாக கருதுகிறார்கள். அவை இல்லாமல் அவர்களால் சாதாரண வயதான 70 வயதுவரை வாழ இயலாது.
08. புத்திசாலி நோயை துரதிர்ஸ்டவசமானதாகக் கருதுவதில்லை, மரணத்தில் இருந்து தப்ப இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாகவே கருதுகிறான்.
09. நான் அடைந்த இன்னல்களுக்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால் அது எனக்கு மன வலிமையைத் தந்திருக்கிறது. அதன் மூலம்தான் எதிர் காலத்தில் விடுதலையைப் பெற முடியும்.
10. கவலையும், துன்பமும் வந்தபடியால்தான் அவற்றுடன் போராடி வெல்லும் ஆற்றலை நம் மனம் பெறுகிறது என்பதை உணர வேண்டும்.
11. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு சிறையிலேயே தங்களை அடைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சிறைக்கான சாவி தங்கள் கையிலேயே இருந்தாலும் அது தங்களிடம் இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்.
12. எந்தவிதமாகப் பார்த்தாலும் பயம் என்பது ஒருவனுக்கு தோல்வியைத் தரும் தடைக்கல்தான். மனது தூங்கினால் அதை தட்டியெழுப்பு, செத்துவிட்டால் அதைப் புதைத்துவிடு.
13. எத்தனையோ நல்ல காரியங்களை நாம் பயத்தினால் செய்யாமல் விடுகிறோம். அந்த நல்ல முயற்சிகளை எல்லாம் செய்ய அஞ்சும் பனற்ற வெற்று முயற்சிகளாக மாற்றுவது பயம்தான்.
14. நீங்கள் வெளியே அனுப்பும் எண்ணங்களால் மற்றவருக்கு என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதுவே உங்களுக்கும் நடக்கிறது. ஏனென்றால் ஆழ் மனதிற்கு ஆள் வேறுபாடு தெரியாது.
15. மற்றவர் உங்களை நோக்கி அனுப்பும் கெட்ட எண்ணங்கள் உங்களை அடையாமல் தடுக்க உங்கள் மனதைப் பயன்படுத்தலாம்.
16. வெகுளித்தனத்தை வெல்ல போராட்டம் தேவை. கல்விக்கு தொடர்ந்து போராட வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடக்கம்தான், ஏனென்றால் கல்வி ஒன்று சேர்ந்து வளர்வது, அது ஒரு வாழ்நாள் வேலை.
17. முயற்சியில் படபடப்பு, அதிகமான சோர்வு காரணமாக பலர் தங்களை இளமையிலேயே கொன்று முதுமையை விரைவாக அடைகிறார்கள்.
18. செய்யுங்கள் அதற்கான சக்தி கிடைக்கும் என்று எமர்சன் கூறுகிறார்.
19. போராட்டத்தை சந்தித்து அதை வெற்றிகொள்.. ! அப்போதுதான் உனது தேவைக்கான வலிமையையும், ஞானத்தையும் பெறுவாய் என்று இயற்கை கூறுகிறது.
20. தொடர்ந்து நகர்ந்து செல் ! அல்லது அழிந்துபோ ! இந்த இரண்டுக்கும் இடையே சாத்தியமில்லை சமாதானமில்லை. எந்தவொரு வழியிலும் இதற்கு விதிவிலக்கும் இல்லை.
21. மிகவும் பாதுகாப்பான காடுகளில் வலிய மரங்கள் வளர்வதில்லை. திறந்த சமவெளிகளில்தான் போராடும் வலிய மரங்கள் தோன்றுகின்றன. பிள்ளைகளுக்கு நீங்கள் வழங்கும் அதிக பாதுகாப்பு அவர்களின் போராட்டச் சக்தியை அழிக்கிறது.
22. ஒருவன் செய்யக்கூடிய சேவையின் தன்மைக்கு ஈடான போராட்டத்தால் அவனைப் பரிசோதிக்காமல், கடவுள் எந்த மனிதனையும் எந்தப் பணிக்கும் தேர்ந்தெடுப்பதில்லை.
23. நம் சம்மதமின்றி இந்தப் பௌதிக உலகில் இறைவன் நம்மைத்தூக்கி எறிந்தது ஏன் என்று கேட்க வேண்டும். நம் மனிதப்பிறப்பின் காரணம், தனிப்பட்ட சுகங்கள், ஆசைகளுக்கு மேலான உயர்ந்த ஒரு நோக்கத்திற்காகத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
24. ஏழ்மையை வென்றவர்கள் தங்கள் வாழ்வின் குறுக்கே கிடந்த தடைகளை எல்லாம் வெல்லும் திறனில் விசுவாசம் கொண்டவராகவே இருந்துள்ளனர்.
25. ஏழ்மையில் பிறப்பவர்களுக்கு தலைவிதி அனுகூலமாக இருக்கிறது என்பதற்கான சாத்தியம் உண்டு. பெரும் செல்வத்துடன் பிறந்தவர்கள் யாருமே உலகை மேலான இடமாக மாற்ற உபயோகமாக எதையும் செய்யவில்லை என்பது ஊரறிந்த உண்மை. ஏழ்மை ஒரு ஏணிப்படி அதைப் பயன்படுத்தி முன்னேறு என்பதே இறைவன் கட்டளையாகும்.
|