vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

மூன் டி.வி.யில் ' மக்களின் நியாயங்கள் ' நிகழ்ச்சி

மூன் டி.வி. - புதியதாக தொடங்கி சிறப்பாக செயல்பட்டுவரும் சிறந்த டி.வி. இத் தொலைக்காட்சியில் 04-09-2009 வெள்ளிக்கிழமை முதல் இந்திய நேரம் இரவு 07.30 மணிக்கு ' மக்களின் நியாயங்கள் ' எனும் நிகழ்ச்சி ஒளி(லி)பரப்பவிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியை தமிழன் டி.வி.யில் 'அலசல்' நிகழ்ச்சி நடத்திய பைசல் நடத்துகிறார். இந்நிகழ்ச்சி சமுதாயத்தில் நடக்கின்ற சீர்கேடுகளை களைந்து ஒரு சிறப்பான பாதை காட்டும் நிகழ்ச்சியாகவிருக்கும் என பைசல் தெரிவிக்கிறார்.

இதன் முதல் நிகழ்ச்சி இளையான்குடி மண்ணில் படம்பிடிக்கப் பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் இளையான்குடிடாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர்அவர்கள்,
பேராசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை உலகிற்கு உணர்த்தி உள்ளார்கள்.
செப்டம்பர் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 07:30 மணிக்கு ஒளி(லி)பரப்பாகும்.