vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

10 ஆம் வகுப்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற வி.களத்தூர் மாணவி
வி.களத்தூரைச் சேர்ந்த A.R.சாதிக்பாஷா-ராபியா பேகம் தம்பதியினரின் மகள் அப்ரின் பர்கத் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 490 எடுத்திருக்கிறார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் படித்த அப்ரின் பர்கத் பெற்ற மதிப்பெண்கள் தமிழ் - 96, ஆங்கிலம் - 97, கணிதம் - 100, அறிவியல் - 100, மற்றும் சமூக அறிவியல் - 97.
மாநிலத்தில் முதல் மதிப்பெண் 500க்கு 496 ஆகும். 6 மதிப்பெண்களில் மாநிலத்தில் முதல் மாணவியாக வரும் ஆசை தவறியது. மேல்நிலைப்படிப்பில் உயிரியல் பாடத்தை தேர்வு செய்து, பிறகு மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்தார். வி.களத்தூர் மாணவி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று வி.களத்தூருக்கு பெருமை சேர்த்திருப்பதை நாம் பாராட்டுகிறோம்.

வி.களத்தூர் IMCT, அரும்பாவூர் ஜமாஅத், பெரம்பலூர் ரோட்டரி சங்கம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டு விழா என பல்வேறு பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் அப்ரின் பரக்கத். +2 விலும் அதிக மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பு நல்ல துறையில் அமைய பிரார்த்திக்கிறோம்.