vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

உலகத் தமிழர் பேரவைக்கு வ.களத்தூர் முகைய்யதீன் நியமனம்
உலகத் தமிழ்க் கவிஞர் பேரவைக்கு பாவலர் வ.களத்தூர் கவிஞர் மு. முகைய்யத்தீன் தமிழ் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உளுந்தூர் பேட்டை நகர தலைவராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். முப்பது ஆண்டுகளாக இலக்கியப் பணி செய்யும் மு. முகைய்யதீன் எழுதிய கவிதைகள் 50 க்கும் மேற்பட்ட இதழ்களில் 600 க்கும் மேற்பட்ட கவிதைகள் இடம் பிடித்துள்ளன.
இவர் சிறந்த கவிஞரும், மனிதநேய மிக்கவரும் ஆவார். இவரை உலகத்தமிழ்க் கவிஞர் பேரவையின் பொதுச்செயலாளர் பனப்பாக்கம் புலவர் சீத்தா தமிழ் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்தார்.
இந்த உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையில் முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மலேசியா டத்தோ சாமிவேல் ஆகிய இருவரும் சிறப்பு புரவலராக உள்ளனர்.
மற்றும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, புதுடெல்லி, கர்நாடகா, கேரளா, மும்பை, இலங்கை, புதுவை ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் அறிஞர்களும் இந்த உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை அமைப்பில் உள்ளனர்.
நன்றி : மணிச்சுடர் 17/18 ஜுன் 2009