vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூரில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு விழா

06-07-2009 ஆம் தேதி வ.களத்தூர் காயிதே மில்லத் திடலில் ஐஎம்சிடியின் 3ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு விழா நடைபெற்றது. விழாவின் துவக்கமாக மௌலவி யு. நூருல் அமீன் உலவி அவர்கள் இறைவசனம் ஓதி விழாவினை துவக்கினார்.
வி.களத்தூர் நாட்டாண்மை ஜனாப் முஹம்மது ஜெக்கரியா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் ஜனாப் ஹசன் முஹம்மது அவர்கள் வரவேற்றார். ஜனாப் யு. கமால் பாஷா, ஜனாப் ஹாஜா மொய்தீன் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வரவேற்புரை வழங்கிய ஜனாப் ஹசன் முஹம்மது கூறுகையில் ஊரின் ஒட்டு மொத்த மாணவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களின் படிப்பாற்றலை கண்காணிக்க வேண்டும் என்று ஐஎம்சிடி யை கேட்டுக்கொண்டார்.
வாழ்த்துரை வழங்கிய வி.களத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.N. இராமநாதன் கூறுகையில் சின்னத்திரையில் வரும் சீரியல்களால் மாணவர்களின் படிப்பு பாதிக்கா வண்ணம் இருக்க வேண்டும் என்று பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.
தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைக்கல்லூரியின் தாளாளர் வாழ்த்துரை வழங்கும் போது பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினார்.முன்னாள் டெபுடி கலெக்டர் ஜனாப் அப்துல் ரஜாக் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை தெளிவாக விளக்கினார். வி.களத்தூர் ஜாமியா பள்ளியின் பேஷ் இமாம் மௌலவி முஹம்மது அலி அவர்கள் பேசும்போது இன்றைய காலத்தில் கல்வி மிக முக்கியமான ஒன்றாக உள்ளது என்பதையும் ஆனால் மாணவர்களுக்கு செல்போன் அவசியமற்றது என்றும் தனது உரையில் கூறினார்.
விழாவின் இடையில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கும், கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரி மாணவர்களுக்கும், ஐ.எம்.சி.டி யின் அறிவொளியின் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த வருடம் 10 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் வி.களத்தூரைச் சேர்ந்த மாணவி அப்ரின் பரக்கத் முதலிடம் பெற்றார். ( முழு விவரத்திற்கு தனி செய்தி பார்க்க )
சிறப்பு சொற்பொழிவை மௌலவி அப்துல் காதிர் காசிமி அவர்கள் நிகழ்த்தினார்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் எப்படி படிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள் வெற்றி பெரும்போது அவர்களை பாராட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாணவர்கள் டி.வி தொடர்களால் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் டி.வி. தொடர்களை பெற்றோர்கள் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக ஆசிரியர் சுல்தான் மொய்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.மௌலவி நூருல் அமீன் துவாவுடன் கல்வி விழிப்புணர்வு விழா நிறைவடைந்தது.
விழாவினை வி.களத்தூர் ஐஎம்சிடி நிர்வாகிகளும், இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரும் இணைந்து நடத்தினர்.