துபை: பெரம்பலூர் தொகுதி எம்.பியும் மத்திய அமைச்சருமான நெப்போலியன் துபை வந்திருந்தார். அவரை வி.களத்தூர் இளைஞர்கள் 13-11-2009 வெள்ளிக்கிழமை அவர் தங்கியிருந்த வீட்டில் சந்தித்து வரவேற்பு அளித்தனர். அப்போது வி.களத்தூருக்கு செய்ய வேண்டிய சில கோரிக்கைகளையும் வைத்தனர்.
அப்போது மத்திய அமைச்சர் இளைஞர்களைப் பார்த்து ' சம்பாதிப்பதற்காக வெளிநாடு வந்தும்கூட ஊர் சிந்தனையில் தானே இருக்கிறீர்கள். ஊருக்கு நல்லது செய்வதைப்பற்றியே சிந்திக்கிறீர்களே ! உங்களைப் பாராட்டுகிறேன். உங்கள் வி.களத்தூரை நான் என் வாழ்வில் மறக்க முடியாது! வி.களத்தூருக்கு எதாவது தேவைகள் என்றால் நிச்சயமாக நாங்கள் ஓகே செய்துவிடுவோம். கவலைப்படாதீர்கள்', என்றார் மத்திய அமைச்சர் நெப்போலியன்.
மத்திய அமைச்சரை சேட் என்கிற ஷர்புதீன், S.அபுசாலிஹ், H.ஷர்புதீன் மற்றும் ஐனுதீன் சகோதரர்கள் சந்தித்து வரவேற்பு அளித்து அத்துடன் பஸ்வசதி, மற்றுமொரு தேசிய வங்கி, ஷார்ஜா திருச்சி விமான சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். அனைத்தையும் பரிவோடுக் கேட்டு பரிசீலிப்பதாகக் கூறினார்.
தகவல்: H. ஷர்புதீன் - துபை
|