| Updated Date : 23-02-2010 |
| என்னப்பா நம்ம வி.களத்தூரில் இத்தனை பஸ்சும் நிக்குது |
என்னய்யா டிரைவர் இன்னிக்கு தான் ஊரிலேர்ந்து வர்ரியா? ஏன் இப்படி வாயை திறந்துக்கிட்டு நம் கடைவீதயை பார்க்கிறே.
ஆமா பாய் இப்பத்தான் டிரிப் முடிஞ்சிச்சு நைட்தான் வந்தேன் ஆமா நம்ம கடை வீதியிலே இதுவரை பார்க்காத அளவுக்கு என்ன இத்தனை பஸ் நிற்குது. அதுவும் பாப்புலர் ஃப்ரணட் ஆப் இந்தியா கொடியை கட்டிக்கிட்டு இருக்காங்க. இது நம்ம வி.களத்தூர் தானா என்று எனக்கே சந்தேகமா இருக்கு?
என்னப்பா இதுகூட தெரியலையா?
அதாம்பா பாப்புலர் ஃப்ரணட் ஆப் இந்தியா மதுரையில் சமூக எழுச்சி மாநாடு நடத்துராங்க அதுக்காகதான் இத்தனை பஸ்சும் போகப் போகுது.
அட இது என்ன அதிசயம் நம்ம ஊரிலிருந்து இதுவரைக்கும் எந்த கட்சி மாநாட்டுக்கும் இத்தனை பஸ் போனதில்லையே பாய். ஏதாவது ஒரு பஸ் இல்லேன்னா இரண்டு பஸ் போகும் ஆனா 7 பஸ் ஒன்னா போறதை நான் இப்பத்தான் பாக்குறேன்.
என்னமோ வயசான கிழவன் மாதிரி சொல்ற என் வயசுக்கே நானே இப்பத்தான் இப்படி பாக்குறேன். ஆது என்னவோ தெரியலைப்பா ஏற்கனவே பக்கத்து மாநிலமான கேரளாவுக்கம் 3 பஸ் ஒரு வேனிலே போனாங்க அதப்பார்க்கும் போது இது ஒன்னும் பெரிசில்லைப்பா ஆமா உனக்கு இந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைப் பற்றி தெரியுமா தெரியாதா?
பாத்தீங்களா ஊர் ஊரா சுத்தினாலும் இந்த அமைப்பை பற்றி நல்லா தெரியும் ஒரு மாசமா வட மாநில பக்கம் போய்ட்டேன். அதுக்காக இப்படி நக்கல் பண்ணக்கூடாது. போங்க பாய் குடிச்ச டீக்கு காச கொடுத்துட்டு போங்க, நான் போய் அந்த அமைப்பு முக்கியஸ்த்தர் கிட்டே கேட்டு நானும் கிளம்பறேன்.
|
| |
| Updated Date : 10-02-2010 |
| எல்லா பஸ்சும் லேட்டாதான் வருது |
தம்பி சீக்கிரம் வாப்பா NT பஸ் சீக்கிரம் போய்விடும்
என்னப்பா உனக்கு விசயம் தெரியாதா எல்லா பஸ்சும் லேட்டாதான் வருது பொருமையா போகலாம்
ஏம்பா லேட்டா வருது எனக்கு ஒன்றும் புரியவில்லை விபரமாக சொல்லுப்பா
பொருமையா பேசிகொன்டு போகலாம்
சரி விசியத்துக்கு வா
அதவாது நம் பேரையூரிலிருந்து ரஞ்சன்குடி பாதைவரை புதுஸா ரோடு போட்டுகிட்டு இருக்காங்கா.
அப்படியா? ரொம்பவும் நல்ல விசயமாச்சே வர வர நமது அரசாங்கம் அனைத்து கிராமங்களுக்கும் நல்லது செய்து வருகிறதே. ரோடு போட்டால் என்னாப்பா பஸ் ஏன் லேட்டா வரனும்.
அதாவது ரோடு போடுவதால் லப்பைக்குடிகாடு போகின்ற N T பஸ் அந்த வழியாக போக முடியாமல் ரஞ்சன்குடி வழியாக சென்று சின்னாறு வழியாக லப்பக்iகுடிகாடு போய் வருகிறது. அதனால்தான் லேட்டா வரும் என்று சொன்னேன்
அது சரி பேரையூர் முதல் ரஞ்சன்குடி வரைதான் ரோடு போடுகிறார்கள் என்று சொல்கிறாய்; மெயின்ரோடு முதல் ஊர் வரை எப்ப போடுவார்கள்
10 ஆண்டுக்கு பின்பு இப்பதான் நமது ஊரின் பாலம் வேலையை ஆரம்பிக்க போறங்க. ரோடு வீனா போய்விட்ட உடனே செஞ்சிடுவாங்களா? எப்படியும் தேர்தலுக்கு முன்னாடி ரோடு போட்டு ஓட்டு கேட்பாங்க !!!
சரி பஸ் வந்துடுச்சு போலிருக்கே வா சீக்கரம் போகலாம்
இந்த பஸ் லேட்டா வரும் என்று நினைத்தால் அந்த டைம்க்கு கரக்ட்டா வந்துடுச்சே பரவாயில்லை.
|
| |
| Updated Date : 05-051-2010 |
| அனேகமா பிப்ரவரியில சமூக நல்லிணக்க விழா |
“வாடா மச்சான் எப்படா வந்தே, நீ வர்ரேன்னு பசங்க சொன்னானுங்க நீ நல்லா இருக்கியா?”
“2நாளைக்கு முன்னாடி தான் மச்சான் வந்தேன், நீ நல்லா இருக்கியா?”
“ம் நான் நல்லா இருக்கேன்டா! சரி வா டீ சாப்பிட்டுகி்ட்டே பேசுவோம்.”
“பாய் ரெண்டு சாயா போடுங்க - அப்புரமா ஊரில என்னடா ஏதாவது விசேஷம் இருக்க?”
“அடடா வாங்கடா! உள்ளுர் டிரைவரும், வெளிநாட்டு டிரைவரும் ஒன்னா ஒக்காந்து டீ குடிக்கீறீங்க.. எனக்கும் ஒரு டீ சொல்லுங்க”
“பாய் இன்னொறு டீ குடுங்க” ஊரில பி.எப்.ஐ ஆபிஸ் எப்ப ஓபன் பண்ணினாங்க சொல்லு.”
“டேய் ஓசியில ஒரு டீ வாங்கி கொடுத்துட்டு ஊர் விசயத்தை கறந்திடுங்க...”
டேய் கோச்சிக்காதேடா நான் சரியா ஊரில இருக்கிறதில்லை, இவன் இரண்டு நாள் முன்னாடிதான் ஊருக்கு வந்திருக்கான். ஒன்னப்போல் ஊரிலேயே இருக்கிறவன்கிட்ட தெரிஞ்சுக்க தானெ கடைவீதிக்கு வர்ரோம். சொல்லுடா..”
“அதாவது கடந்த 19ஆம் தேதி நம்ம ஊரில பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகம் நம்ம வி.களத்தூரில திறந்தாங்க. அதே பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நம்ம ஊரில சமூக நல்லிணக்க விழா நடத்தப்போறதா பேசிகிட்டு இருக்காங்க அனேகமா பிப்ரவரியில நடத்துவாங்கன்னு நினைக்கிறேன். ஆனா இந்த தகவல் இன்னும் கிளியரா அறிவிக்கலை மீட்டிங் தேதி எப்போன்னும் தெரியலே. தெரிஞ்சா சொல்றேன்.”
“பாய் இந்தாங்க டீ காசு“
“ஏம்பா 15ரூபாய் 10ரூபாய் கொடுங்க மீதி 1 ரூபாய் தர்ரேன்.”
“என்னடா இன்னும் நம்ம ஊரில் டீ 3ரூபாய் தானா? பராவாயில்லையே”
“சரிடா பார்ப்போம்... டேய் எங்கடா அவன்பாட்டுக்கு போய்ட்டான்”
“விசயத்தை கலக்ட் பண்ண போயிருப்பான் விடு நாம கிளம்புவோம்..” |
| |
| Updated Date : 24-01-2010 |
| நம்ம ஊரில ஐஎம்சிடி ங்கிற அமைப்பு |
என்ன பாய் கடைவீதிக்கு பனியனோட வந்திட்டீங்க? எல்லாம் குளிருதுங்கிறாங்க நீங்க பனியனோட வந்திருக்கீங்க
அட ஒன்னுமில்லைப்பா வீட்டில் உட்கார்ந்து போர் அடிக்குது. அதான் கடைவீதிக்கு வந்தா நாளு விசயம் தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். அப்புறம் எனக்கு ஒன்னும் பெரிசா குளிர் தெரியலே. நீ ஏதாவது முக்கியமான விசயம் இருந்துச்சுன்னா சொல்லேன்
ம் இருக்கே இப்போ நம்ம ஊரில ஐஎம்சிடி ங்கிற அமைப்பு இருக்கில்ல அவங்க வட்டியில்லா கடன் திட்டத்தை அறிவிச்சு இந்த மாசம்முதல் கடன் கொடுக்க ஆரம்பித்து இருக்காங்க.
அப்படியா ரொம்ப சந்தோசஷம். ஆமா ஏற்கனவே புஷ்ரா சேவை அமைப்பு கொடுத்துட்டு இருக்காகங்கல்ல, அவங்க இப்பவும் கொடுக்கராங்களா?
ஆமா ஆமா அவங்க இப்பவும் கொடுத்திட்டுதான் இருக்காங்க.
வேற ஏதாவது விசயம் இருக்குதாப்பா ஏகப்பட்டது இருக்கு நான் இப்ப கிளம்பிட்டேன். நாளைக்கு கண்டிப்பா வாங்க சொல்றேன். |
| |
|
updated Date : 16-01-2010 |
| வி.களத்தூரில் 'ஜல்லிக்கட்டு' நிறுத்தம் |
'தம்பி! சீக்கிரம் வாப்பா அங்கே என்ன மாடுங்க ஓடாமெ நடந்துப் போவுது.?'
'மாடுங்க நடக்காமெ பறந்துட்டாப் போகும்'.
''அது இல்லெப்பா.. இன்னெக்கு 'ஜல்லிக்கட்டாச்சே' மாடுங்க ஓடுமே.அதான் கேட்டேன்..'
'அது சரிதான். கடந்த சில வருஷமா.. ஜல்லிக்கட்டு நடக்கும்போது.. தெருவுக்குள்ள சிலர் வேணுமின்னே மாடுகளை விட்டாங்களாம். அதே மாதிரிப் பிரச்சினை இந்த வருடமும் நடக்கக்கூடாதுன்னு , காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்டாங்களாம். பாதுகாப்புக் காரணங்களுக்காவும் உச்ச நீதிமன்றத்தின் சில கட்டுப் பாடுகளையும் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் வி.களத்தூரில் 'ஜல்லிக்கட்டு' நடத்தவதற்கு தடைவிதித்தாகக் கூறப்படுகிறது.
|
| |
| updated Date : 01-01-2010 |
| ரேஷன் கடைக்கே ரேஷனா? |
'அடடே வாப்பா தம்பி! கடைவீதிக்கு வந்துட்டு சும்மாப் போனா எப்படி? எதாவது வாங்கிட்டுப் போப்பா? '
'என்னத்தப்பா வாங்கச் சொல்றே! ரேஷன் கடைக்குப் போனா ஒரேப் பிரச்சினை'
'என்ன பிரச்சினை? ரேஷன் கடையிலேதான் எல்லாப் பொருளுமே எல்லா மாசமும் கிடைக்குமே'
'எங்கேப்பாக் கிடைக்குது. போனவாரம் ரேஷன் கடையிலே சாமான் வாங்கப் போனவங்களுக்க ஒன்னுமேத் தரலயாம். ஒருமாசம் விட்டு ஒரு மாசம்தான் பொருள் தர்றாங்க... நம்ம ஊர் இளைஞர்கள் போய் அநியாயத்தை தட்டிக்கேட்டாங்களாம். அதுக்கு அந்த 'பொறுப்பான' பொறுப்பாளருங்க 'சாமான் ஒன்னும் வரலை. எங்களுக்கே ரேஷன் மாதிரி 40 சதவிகிதப் பொருள்தான் வருது'ன்னு சொன்னாங்களாம். பெரிய அதிகாரிங்க 'இனிமே எல்லாப் பெர்ருளும் கிடைக்கும்னு சொன்னாங்களாம். ''
'அடடே! இதுவும் நல்லாயிருக்கே! ரேஷன் கடைக்கே ரேஷனா?'
'ஆமாம். அப்புறம்.. பழைய I.O.B. இருந்த ரோட்டுலே இப்போ சிமெண்ட் ரோடு போடுறது தெரியுமா?
'அப்படியா ! நல்லது நடந்தா சரி! - ஓ.கே. வர்ரேன்ம்பா.. டைம் ஆயிடுச்சி.... பார்க்கலாம்.'
|
| |
|
Update : 10/12/2009 |
| 'என்னப்பா நீ புதுசா கடைவீதிக்கு வந்திருக்குறே?
ஏதாவது ஊர் செய்தியை தெரிஞ்சுக்கிட்டுப் போகலாமேன்னுதான்'
'என்னத்தெ புதுசா தெரிஞ்சுக்கப்போறே.. அது சரி... உனக்கு அந்த கேஸ் விஷயம் தெரியுமா?'
'எந்தக் கேஸ். ?'
'அதாம்பா... நம்ப ஜமாஅத்தார் மேலேப் போடப்பட்ட கேஸ். அது இருதரப்பினரும் சமாதானமாகி கேஸ் முடித்தாகிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். முழுவிவரம் வேணும்னா நீனே போய் விசாரிச்சுக்கோ.'
'அல்ஹம்துலில்லாஹ்.. வயசானவங்கல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டிட்டருந்தாங்கோ.. நல்லதாக முடிந்திருந்தா சரி......- ஆமா ஏதோ ஒன்னுக் கேள்விப்பட்டேனே... ரோட்டிலே கொடி நடும்போது யாரோ தண்ணியெப் போட்டுக்கிட்டு கத்துனதா... அது என்ன மேட்டரு தெரியுமா...'
'ஓ..அதுவா...ADM கல்யாண மண்டபத்துல ஒரு கட்சியோடு மீட்டிங் நடக்கும்போது. அதோட விளம்பரத்திற்காக பஸ்ஸ்டாண்டுலேயிருந்து மண்டபம் வரைக்கும் ரோட்டிலே கொடி கட்டிக்கொண்டிருந்தாங்கலாம். அப்போ ஊர் தலைவியோடு புருஷன் தண்ணியப்போட்டுக்கிட்டு கத்தினார். அவரிடம் சொல்லாமல் கொடிகட்டக்கூடாதாம். அது போலீஸ்வரைக்கும் போய் தலைவியோட புருஷனை போலீஸ் சத்தம் போட்டதாகக் கேள்வி. அப்புறம் கட்சியோட மீட்டிங் அமைதியாக நடந்ததாம். இது ஒருமாதத்திற்கு முன்னே நடந்ததாக அல்லவாக் கேள்விப்பட்டேன்.. இப்போப் போய் கேட்கிறே...'
'திடீரென்று சந்தேகம் வந்தது. என்ன மேட்டருன்னேத் தெரியலை.. அதான் கேட்டேன்.'
'எனக்கும் முழுசாகத் தெரியாது.. நானும் கேள்விப்பட்டதைத்தான் சொன்னேன். நான் சொன்னது சரியா தப்பான்னு விசாரிச்சுப் பார்த்துக்கோ.. இன்னைக்கு நேரமாகிவிட்டது.. அப்புறமா 'கடைவீதி'யிலே பார்க்கலாம் . நான் வர்றேன்ம்பா...'
|
| |