ஜுலை மாதம் 10 ஆம் துபை ஐஎம்சிடியின் பொதுக்குழு நடைபெற்றது. அதில் ஐஎம்சிடியின் துபை பிரிவின் தலைவர் ளு. நூர் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவில் ஒவ்வொரு பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் அறக்கட்டளையின் வளர்ச்சிக்குண்டான வழிமுறைகளை எடுத்து கூறினார்.கல்வி மேம்பாட்டு பிரிவின் தலைவர் வி.களத்தூரில் நடந்த கல்வி விழிப்புணர்வு விழாவினை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கும் ஒத்துழைப்பை தந்துதவிய இஸ்லாமிய இளைஞர் அணி மற்றும் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினருக்கும் நன்றி கூறினார். மேலும் வி.களத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு 12ஆம் வகுப்பிற்கு கணக்கு ஆசிரியர் இல்லாத குறையைப்போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
வட்டியில்லா கடன் திட்ட தலைவர், அறக்கட்டளையின் பொருளாளர் மற்றும் வியாபாரப்பிரிவின் தலைவர் அனைவரும் தங்களது ஆறு மாத கணக்குளை சரிபார்த்து ஒப்படைத்தனர்.கூட்டத்தில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அதில் கீழ்கண்டவற்றை தீர்மானமாக இயற்றப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வி. களத்தூர் கிளையில் நீண்ட காலமாக இருந்த பெண்களுக்கான தனி இருக்கைகள் கொண்ட பகுதியை மீண்டும் ஒதுக்கி தருவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
வி. களத்தூர் உயர்நிலைப்பள்ளியின் 12 ஆம் வகுப்பிற்கு கணக்கு ஆசிரியர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
துபையில் இருக்கக்கூடிய வி.களத்தூர் நண்பர்களின் மொபைல் நம்பர்களை அனைத்தும் சேகரித்து புத்தகமாக தயாரிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு டேரா லாஸ்ட் அவர் ரெஸ்டாரென்ட் மாடியில் நடைபெற்றது.இந்த பொதுக்குழுவிற்கு ராசல் கைமா, சார்ஜா போன்ற இடங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
|