vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஆறாமாண்டு ம‌ல‌ர் வெளியீட்டு விழா...

இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை IMCT ன் 6ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா 30 ஜனவரி 2009 அன்று KMMC கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டரில் சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவினை ஜனாப் D.ஷபியுல்லாஹ் அவர்கள் கிராத் ஓதி துவக்கிவைத்தார், ஜனாப் M.கமால் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார், ஜனாப் M.ஷபியுல்லாஹ் அவர்கள் வரவேர்புரையாற்றினார்.

IMCT தலைவர் ஜனாப் S.நூர் முஹம்மது அவர்கள், IMAN செய்தி தொடர்பாளர் ஜனாப் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்கள், வி.களத்தூர் யுஏஈ நலசங்க தலைவர் ஜனாப் O.A. முஹம்மது ஆரிஃப் அவர்கள், புஷ்ரா நல அறக்கட்டளை பொருளாளர் M.ஜாபர் அலி அவர்கள் மற்றும் வி.களத்தூரிலிருந்து வருகைதந்த ஜனாப் A.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள், ஜனாப் J.சிராஜ் தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

IMCT தகவல் தொடர்பு பிரிவு தலைவர் ஜனாப் J.முஹம்மது அலி அவர்கள், IMCT கல்வி மேம்பாட்டு பிரிவு தலைவர் ஜனாப் L.ஷேக் முஹம்மது ஆகியோர் தொடக்கஉரை ஆற்றினார்கள்.

IMAN பொதுச் செயலாளர் ஜனாப் லியாக்கத் அலி அவர்கள், IMAN துனைத் தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள், IMAN ஆடிட்டர் ஜனாப் F.M.பாரூக் அவர்கள், IMAN பெண்கள் கலைக்கல்லூரி செலாளர் ஜனாப் K.சையது ஜாபர் அவர்கள், IMAN மக்கள் தொடர்பாளர் ஜனாப் தாஹா முஹம்மது, வி.களத்தூர் யுஏஈ நலசங்க செயலளர் ஜனாப் S. சாதிக் பாஷா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

IMAN துனைத் தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் சிறப்பு மலரை வெளியிட ஜனாப் அபுதாஹீர் (இந்தியா சில்க் ஹவுஸ்) அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொன்டார்.

வி.களத்தூர் மௌலவி M.H.நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் மார்க்க உரையாற்றினார், சிங்கப்பூரிலிருந்து வருகைதந்த ஆடிட்டர் பெரோஸ் கான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

IMCT வட்டியில்லாக் கடன் பிரிவு தலைவர் ஜனாப் B.அஹம்மது அலி அவர்கள் நன்றியுரையாற்றினார். இரவு சிற்றுன்டிக்கு Tasety Briyani ரெஸ்டாரன்ட்ல் தயார் செய்யப்பட்டு இருந்தது. இவ்விழாவில் நுற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயனடைந்தனர்.