vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூரில் ஐடியல் ஆங்கிலப் பள்ளி திறப்புபவிழா

வி.களத்தூர் ஜாமிஆ காம்ப்ளக்ஸ் வளாகம் 'Friday Markert' அருகில் 'ஐடியல் ஆங்கிலப் பள்ளி திறப்பு விழா 01-06-2009 திங்கள் கிழமை நடைபெற்றது. ஐடியல் ஆங்கிலப் பள்ளி இயக்குநர் கமால்பாஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வி.களத்தூர் ஜமாஅத் நாட்டாண்மை A.J.முஹம்மது ஜெக்கரியா மற்றும் டாக்டர் A.கமால் பாஷா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. முருகன் வரவேற்றார்.

பள்ளி ஆரம்பிப்பதற்காக இந்நிர்வாகக் குழுவினர் செய்த முன்னேற்பாடுகளையும் பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு பள்ளிகளில் செய்த ஆய்வைப் பற்றியும் விளக்கமாகக் கூறினார் பள்ளியின் இயக்குநர் ஷேக் முஹம்மது. இன்டர் நேஷனல் பள்ளியின் தரத்திற்கும் அதன் நடைமுறைகளையும் உள்வாங்கி செழுமைப்டுத்தி சிறந்த முறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி, தரமான கல்வியை தருவதின் செயல்பாடுகளை விளக்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை வகித்த இயக்குநர் மு.கமால் பாஷா அவர்கள் கூறும் போது. 'பள்ளியின் செயல்பாடுகளை மிக ஆழமாக ஆய்ந்து ஆலோசனை செய்த பின்னரே அதை செயல் வடிவம் கொடுக்கு முன் வந்துள்ளதாகக் கூறினார். மேலலும் கூறும் போது, தரமான மாணவர்களை உருவாக்குவதே இப்பள்ளியின் நோக்கம் என்றும் கூறினார். பள்ளியின் சிறப்புத் தன்மையைப் பற்றி பள்ளியின் ஆசிரியை விமலா விளக்கினார்.

இப்பள்ளியை பெரம்பலூர் பனிமலர் பள்ளியின் தாளாளர் ஆ.கலியபெருமாள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

உயர்நீதி மன்ற வழக்கறிஞர் வி.களத்தூர் F.A.ரஷீது அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்

உலகத்தமிழ்க்கவிஞர் பேரவையின் மாநில துணைச் செயலாளர் வ.களத்தூர் முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.