தோற்றம் :
இனிய வ.களத்தூர் இனிய ஊர் திருச்சிராப்பள்ளி - சென்னை (NH45) தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரிpலிருந்து வடக்கே 25 கிலோ மீட்டரும், பின் அந்த NH 45 சாலையிலிருந்து ஆறு கிலோ மீட்டர் உள்புறமாக அமைந்துள்ள அமைதியான ஊராகும். அக்கால குறுநில மன்னர் நவாப் ஜான் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. வெளியூரிலிருந்து பிழைப்பை தேடி வந்தவர்கள், ஊரின் செல்வ-செழிப்பை கண்டு, பூர்விகத்தை விரும்பி வ.களத்தூரில் தங்கினர் கல்லாற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் இவ்வூர் எழில் மிக்கதாய் காட்சி தருகிறது. விவசாய வளமும் சிறந்து விளங்குகிறது.
குறுநில மன்னர் நவாப் ஜான் அவர்களின் நெற்களஞ்சியமாக விளங்கிய இவ்வூர், மன்னர் அவர்களின் அமைச்சரவையில் ""களம்"" - கொண்ட ஊர் என்ற பெருமையை அடைந்து, காலப்போக்கில் ""களங்கொண்டான்"" ஊர் என்றாகி தற்போது களத்திற்கு பெயர் போன ஊராகிய எங்கள் ஊர் களத்தூர்"" என்று பெருமை பொங்க அழைக்கப்பட்டது. தமிழ் நாட்டில் களத்தூர் என்ற பெயர் கொண்ட ஊர்கள் அதிகமாக இருப்பதால் எங்கள் ஊரின் அருகாமையில் வண்ணாரம்பூண்டியை அடையாளமாக வைத்து வ. களத்தூர் என்ற பெயருடன் புகழ் பெற்றது. ஆங்கிலத்தில் வ. என்பது V (வி) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதால் 'வி.களத்தூர்' என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
தொழில் :
வி.களத்தூரின் ஊரின் முக்கிய தொழிலாக விவசாயம், கொடிக்கால் பயிருடுதல், கத்தாலை இழைத்தல் சிறு வியாபாரம் போன்றவற்றை கொண்டு முன்னேறி வந்தது. இதுநாள் வரை விவசாயத்தை நம்பி வாழ்கின்ற ஏராளமான குடும்பத்தை கொண்டுள்ள ஊராகும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் பிழைப்பை தேடி சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ஒரு சிலர் சென்றனர். காலப்போக்கில் அவர்களுக்கு அந்நாட்டின் பூர்வீக குடிமகனாகவும் இருந்து வருவதை கண்டு பெருமையடைகிறோம். அதன் பின்பு முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் வளமிக்க நாடான வளைகுடாவிற்கு வேலை தேடி பயணமானார்கள். இன்றும் பயணமாகிக்கொண்டிருக்கிறார்கள்.
ஊரின் அமைப்பு :
எங்கள் இனிய ஊரின் தெற்கு பகுதியில் ஏரியும். வடக்கு பகுதியில் பெருமை தேடிதரும் கல்லாறும் அமைந்துள்ளது. மதவேறுபாடில்லாமல் வாழ்ந்து வரும் எங்கள் ஊரின் மொத்தப் பரப்பளவு 1355-93 ஹெக்டேர் ஆகும். இங்கு சுமார் 5500 ஆண்களும் 5000 பெண்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
கல்வி நிலையங்கள் :
எங்கள் ஊரில் அரசுமேல்நிலைப்பள்ளி, பெண்கள் நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஐடியல் ஆங்கிலப் பள்ளி, ஹிதாயத் ஆங்கிலப்பள்ளி, செயின் மேரிஸ் ஆங்கிலப்பள்ளி, லிட்டில் ஆனந்த் ஆங்கிலப்பள்ளி, பாக்கியத்துஸ் சாலிஹாத் (பெண்கள்)அரபிக்கல்லூரி ஆகியவை சிறப்பாக இயங்கி வருகிறது.
சார்ந்த ஊர்கள் :
எங்கள் ஊரை சார்ந்து சுமார் இருபது குக்கிராமங்கள் இருந்து வருகிறது. சுற்றியுள்ள இக்கிராமங்களுக்கு தாய் கிராமமாக எம் இனிய ஊர் திகழ்கிறது.
|