vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

தமிழக கவர்னரை சந்திக்கிறார் வி.களத்தூர் மாணவி அப்ரின் பரக்கத்

தமிழக கவர்னர் சுர்ஜித் சிங்பர்னாலாவை சந்திக்கிறார் வி.களத்தூர் மாணவி அப்ரின் பர்க்கத்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்ற அப்ரின் பரக்கத் உள்படமாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவிகள் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை வருகிற 28-8-2009 அன்று சந்திக்கிறார்கள்.

தமிழகத்தின் பழம் பெரும் தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறது.
1999ல் ஆரம்பிக்கப்பட்ட 'முதல்வன்' விருது வழங்கும் நிகழச்சியின் பத்தாம் ஆண்டின் சிறப்பு நிகழச்சியாக பத்தாம் மற்றும் பனிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ=மாணவிகளை அழைத்து 'முதல்வன்' விருது வழங்கவிருக்கிறது.மூன்று நாள் நிகழச்சியாக நடைபெறும் இச்சிறப்பு நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் மாணவ=மாணவிகள் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் நாள் 29-8-2009 இறுதி நிகழ்ச்சியில் கப்பல் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு ஜி.கே.வாசன் கலந்து கொண்டு 'முதல்வன் விருதை வழங்குகிறார்.