vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

பெரம்பலூரில் வேலைவாய்ப்புத் திருவிழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 'வேலைவாய்ப்புத்திருவிழா 2009' ஆகஸ்டு 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவிருப்பதாக தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன்க கூறினார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம், சென்னை ரெக்ரூட் நிறுவனம் சார்பில் வருகிற 8, 9ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வளாக நேர்காணல் நடக்கிறது. வேலைவாய்ப்பு முகாமில் ரிலையன்ஸ், சோழமண்டலம், சதர்ன் லேண்டு, கன்ட்ரிகிளப், ரெரோட், சார்கோ, ஸ்பார்ஸ், அட்வண்டிட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. வளாக நேர்காணலில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, இறுதி நேர்முக தேர்விற்காக இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பணியிடத்திற்கான இறுதி தேர்வு சென்னையில் நடக்கிறது. மாத சம்பளமாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
வளாக நேர்காணலில் பெரம்பலூர், இதர கல்லூரிகளைச் சேர்ந்த பிஇ, பிடெக், எம்சிஏ, எம்பிஏ, எம்காம், எம்எஸ்சி, பிகாம், பிஎஸ்சி, பிஏ, பிசிஏ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். மேலும் 2006,07,08 மற்றும் 2009ம் ஆண்டு தேர்ச்சிபெற்ற இருபாலர்களில் பட்டப்படிப்பு படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விபரம் அறிய புருஷோத்தமன் 9941603201, தளபதி 9884925295, அருள் 9841573015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.dsgroups.org என்கிற இணையதள முகவரியை பார்க்கலாம் என தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணைத்தலைவர் கதிரவன், இயக்குநர்கள் மணி, பூபதி, மீனாட்சி, நிர்வாக அலுவலர் ராஜசேகர், பொறியியல் கல்லூரி டீன் சேகர், வேலைவாய்ப்புத்துறை அலுவலர் மஞ்சு, அலுவலக மேலாளர் செந்தில் உடனிருந்தனர்.