vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

டிசம்பர்-6ல் மாபெரும் பாசிச எதிர்ப்பு கருத்தரங்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய டிசம்பர்-6ல் மாபெரும் பாசிச எதிர்ப்பு கருத்தரங்கம் பெரம்பலூர் நிஸ்வான் மஹாலில் நடைப்பெற்றது.

இக்கருத்தறங்கிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A. அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார் இந்நிகழ்சிக்கு வந்தவர்களை A. ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் வரவேற்றார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருநெல்வேலி மாவட்ட பேச்சாளர் S.அஹமது இப்ராஹிம் பைஜி. அவர்கள் பாபர் பள்ளியின் ஆரம்பமுதல் இன்றுவரை நடந்த சம்பவங்களை விரிவாகா உறையாற்றினார், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சகோ பேரா. முரகையன் மற்றும் மௌலானா. பன்னூல் ஆசிரியர் M.Y . ஷாகுல் ஹமீது, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் சகோ.கண்ணபிரான், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சகோ A.வேணுகோபால், மற்றும் இந்திய யூனியன் மஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சகோ A. அல்லாபிச்சை, மற்றும் மௌலவி காரி A. முஹமது சாதிக், மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் சகோ K.காஜா ஷரிப், மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் சகோ துரை தாமோதரன், மற்றும் மனித உரிமை கண்காணிப்பகதின் மாவட்ட செயலாளர் A .சிவக்குமார் ஆகியோர் இக்கருத்தரங்கில் தங்களின் கருத்துகளை பிரதிபலித்தனர் அனைவரின் கருத்துக்களும் பார்க்கும்போது லிபரான் கமிஸனின் 68 குற்றவாளிகளை உடனடி கைது செய்தும் அதே இடத்தில் மீன்டும் பள்ளியை கட்டிதறுமாறும் தங்களது கருத்துகளை ஆக்ரோஸமாக தெரிவித்தனர்.
இருதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வி.களத்தூர் தலைவர் சகோ.S. முஹம்மது இக்பால் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை அனைத்தும் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் K .அப்துல் ஹக்கீம் தொகுத்;து வழங்கினார். இக்கருத்தறங்கிற்கு சுமார் 500க்கு மேற்பட்ட நபர்கள் கழந்துகொன்டனர்.

இதே போன்று நமது மாவட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ஆகிய அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தினார்கள் மேலும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் கழந்து கொன்டனர்.