துபை : ஆர்வம் மட்டுமிருந்தால் போதும், கூடவே.. கணிணி பயன்படுத்தம் முறையும் தெரிந்திருத்தல் அவசியம். துபையில் நடைபெறும் கணிணியில் தமிழ் பயன்படுத்தம் பயிலரங்கில் கலந்து பயன்பெறுங்கள்.
துபையில் செயல்பட்டு வரும் அமீரக தமிழ் மன்றம் வருகிற 20-11-2009 வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணியளவில்,
கணிணியில் தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்ததி எழுதுவது எப்படி?
மின்னஞ்சல், பேச்சரங்கு போன்றவற்றில் தமிழைப் பயன்படுத்துவது எப்படி?
தமிழ் மென்பொருட்களை ( softwares) இலசமாக
பெறவேண்டுமா?
உங்கள் எழுத்துத்திறமையை உலகுக்கு எடுத்துச் செல்வது எப்படி? போன்ற பல்வேறு அய்யங்களுக்கு விடையளிக்கக் காத்திருக்கிறார்கள்..
அமீரகத் தமிழ் மன்றத்தினர் அமீரகத்தில் இனிய தமிழ் நிகழ்ச்சிகளைத் தந்து கொண்டிருப்பவர்கள். 'தமிழில் பேச ஆர்வமேற்படுத்துபவர்கள்' இம்மன்றத்தினர். இன்று பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழில் பேசுவோருக்கு பரிசுகளைத் தருகிறார்கள். இந்த ஆர்வத்தை முதலில் ஏற்படுத்தியவர்கள் இவ்வமைப்பினர் என்றால் அது மிகையல்ல. அன்பர் ஆசிப் மீரானின் பங்களிப்பு இதில் மறக்கமுடியாது.
உலக தமிழ் மாநாடு நடைபெறவிருக்கும் இக்காலக்கட்டத்தில் இதுபோன்ற கணிணிதமிழ் பயிலரங்கம் இன்றியமையாதது. இவ்வாய்ப்பை தமிழ்பேசும் சமூகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
20-11-2009 வெள்ளிக்கிழமை துபையில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பமுள்ளவர்கள் மற்றும் முழு விவரம் அறிய விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 050 - 655 02 45 மற்றும் 050 - 651 48 25.
|