வி.களத்தூர் பாலம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா 19-10-2009 திங்கள் கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்தியதொலைத் தொடர்பு அமைச்சர் அ.ராசா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் நடிகர் நெப்போலியன் வி.களத்தூர் வருகை தந்திருந்தபோது பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் வாக்குறுதியளித்தார்.
மக்களவைக்கு தேர்ந்தெடுத்தப்பின்னர் பெரம்பலூர் வந்திருந்த நெப்போலியன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பி்ன்போது தனது எதிர்காலத்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது வி.களத்தூர் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிததார்.அதன்பிறகு டெண்டர் அறிவிக்கப்பட்டு விடப்பட்டது . டெண்டர் எடுத்த நிறுவனம் அதற்கான பூமி பூஜையை 24-08-2009 திங்கள் கிழமை காலை போட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் : H. ஷர்புதீன்
|