vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூர் பாலம் கட்டுமானப் பணி

வி.களத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலம் கட்டுமானப் பணி விரைவில் துவங்க உள்ளது. அதற்கான பூமி பூஜை 24-08-2009 திங்கள் கிழமை காலை போடப்பட்டது.

இப்பாலம் கட்டுவதற்காக ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. அமைச்சர்களின் வருகையின் போதும் மாவட்ட ஆட்சித் தலைவரின் வருகையின் போதும் கடையடைப்பு நடத்தப்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் நடிகர் நெப்போலியன் வி.களத்தூர் வருகை தந்திருந்தபோது பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் வாக்குறுதியளித்தார்.

மக்களவைக்கு தேர்ந்தெடுத்தப்பின்னர் பெரம்பலூர் வந்திருந்த நெப்போலியன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பி்ன்போது தனது எதிர்காலத்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது வி.களத்தூர் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அதன்படி அதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்று டெண்டர் அறிவிக்கப்பட்டு, தனியார் நிறுவனம் இப்பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று 24-08-2009 திங்கள் கிழமை காலை 11 மணிக்கு வி.களத்தூர் பாலததில் பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

தகவல் : அ. ஆதம் ஷரீப் - வி.களத்தூர்