vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

அமீரக தமிழ் மன்றம் நடத்தும் 'நீயா? நானா?'

அமீரகத் தமிழ் மன்றம் தனது 10ஆம் ஆண்டு விழாவை வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடவிருக்கிறது.

இவ்விழாவிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அமீரகத் தமிழ் மன்றம் 'நீயா நானா?' நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை ஸ்டார்விஜய் தொலைகாட்சியில் பிரபலமான ‘நீயா நானா’ தொகுப்பாளர் திரு. கோபிநாத் நிகழ்த்தவிருக்கிறார்.

”வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் வாழ்க்கை சுவையானதா? சுமையானதா?”

என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீங்களும் பேசலாம்.

ஆர்வமிருப்பவர்கள் atmuae@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். அல்லது 050-6550245 அல்லது 050-6514825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பெயர்களைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: 22.01.2010
முதற்கட்ட தேர்வு நாள்: 27.01.2009
இத்தகவலை 'அமீரகத் தமிழ் மன்றத்தலைவர்' ஆசிப் மீரான் தெரிவிக்கிறார்.